நபிமார்கள் இறைவனின் அடிமைகளே. ( 1 )
நூஹ் நபியும் அடிமை தான்.
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا
நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றியோரின் சந்ததிகளே! அவர் நன்றிமிக்க அடியாராக இருந்தார்.
திருக்குர்ஆன் 17:3
إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியாராக இருந்தார்.
திருக்குர்ஆன் 37:81
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا عَبْدَنَا وَقَالُوا مَجْنُونٌ وَازْدُجِرَ
அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம் பொய்யெனக் கருதியது. அவர்கள் நமது அடியாரைப் பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். அவர் விரட்டப்பட்டார்.
திருக்குர்ஆன் 54:9
ضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ نُوحٍ وَامْرَأَتَ لُوطٍ ۖ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. "இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!'' என்று கூறப்பட்டது.
திருக்குர்ஆன் 66:10
இல்யாஸ் நபியும் அடிமையே.
سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
இல்யாஸீன் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
திருக்குர்ஆன் 37:130,131,132
No comments:
Post a Comment