நபிமொழி
என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் சந்திரன் பிரகாசிப்பது போல் முகங்கள் பிராகாசித்தபடி சொர்க்கத்துக்குள் நுழைவார்கள்` என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே உக்காஷா இப்னு மிஹ்ஸன் அல்அசதீ(ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடுபோட்ட வண்ணப் போர்வையை உயர்த்தியவாறு எழுந்து,
`இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள், `இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக` என்று பிரார்த்தனை செய்தார்கள்.
பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, `இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்றார்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `உக்காஷா உம்மை முந்திக் கொண்டுவிட்டார்` என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி)
நூல் : புகாரி 5811
No comments:
Post a Comment