Thursday, October 20, 2022

சூரத்துல் : அஷ்ஷுராவின் அழகிய வசனங்கள்💚

 சூரத்துல் : அஷ்ஷுராவின் அழகிய வசனங்கள்💚


• குழந்தை பாக்கியம் என்பது ஓர்  அருட்கொடை அது அல்லாஹ்விடமே உள்ளது! நம்முடைய முயற்சி அல்லது மருத்துவத்தினால் இது கிடைத்து விடாது!

• இதில் நபிமார்கள் கூட விதி விலக்கு கிடையாது! நபி ஜக்கரியா ( அலை ) அவர்களுக்கு கூட தள்ளாத வயதில் தான் அல்லாஹ் பிள்ளை பாக்கியம் கொடுத்தான்! நபி இப்ராஹிம் ( அலை )

அவர்கள் கூட வயதான காலத்தில் தான் பிள்ளை பாக்கியம் அல்லாஹ் கொடுத்தான்!

• யாரையும் பிள்ளை பாக்கியம் இல்லை என்று குறை கூறாதீர்கள் அல்லாஹ் பாதுகாக்கணும் இன்று பிள்ளை பாக்கியம் இல்லை என்றால் இவள் என்ன பாவம் செய்தாலோ அல்லாஹ் இவர்களுக்கு பிள்ளை கொடுப்பது இல்லை நவதுபில்லாஹ்! என்று குறை கூறுகிறார்கள்!

• இன்னும் சிலர் உனக்கு ஆண் குழந்தை இல்லை என்று அதை வைத்து குறை கூறுகிறார்கள் இன்னும் சிலர் உனக்கு பெண் குழந்தை இல்லை என்று அதை வைத்து தவறாக பேசுகிறார்கள்! நவதுபில்லாஹ்!

• இவ்வாறு பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களை பேசுவது உண்மையில் நீங்கள் அவர்களை பேச வில்லை மாறாக அவர்களுக்கு அந்த பாக்கியத்தை கொடுக்காத அல்லாஹ்வை குறை கூறுகிறீர்கள் நவதுபில்லாஹ்!

• நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு அவர்கள் வேண்டும் என்றால் விட்டு விடலாம் ஆனால் ஆனால் அல்லாஹ் விட மாட்டான்!

• அல்லாஹ்விற்கு சில நொடிகள் ஆகாது அவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கொடுத்து விட்டு குறை கூறியவர்களை கடுமையான நோயில் தள்ள!

• அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! அல்லாஹ் யாருக்கு எப்போது எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன்!

• நாம் இப்போது பிள்ளை இல்லை என்று கவலை படலாம் ஆனால் நமக்கு இப்போது பிள்ளை பாக்கியம் கொடுத்தால் அது சரியாக இருக்காது அல்லது ஏற்றதாக இருக்காது என்று அல்லாஹ் நமக்கு கொடுக்காமல் இருப்பான் ஆனால் இதை நாம் அறிய மாட்டோம் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்!

அல்லாஹ் போதுமானவன்.♥️

No comments:

Post a Comment