Monday, March 20, 2023

சொர்க்கத்தில் உணவு. ( 1 )

 சொர்க்கத்தில் உணவு. ( 1 )

ஏற்கனவே சாப்பிட்ட கனிகள் வடிவத்திலேயே கனிகள் உணவாக அளிக்கப்படும்.

وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوا هَٰذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ ۖ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا ۖ وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ۖ وَهُمْ فِيهَا خَالِدُونَ

"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 2:25

لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُم مَّا يَدَّعُونَ

அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும்.
திருக்குர்ஆன் 36:57

فِي جَنَّاتِ النَّعِيمِ

இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 37:43

وَأَمْدَدْنَاهُم بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ

அவர்களுக்குக் கனியையும், அவர்கள் விரும்பும் இறைச்சியையும் அளிப்போம்.
திருக்குர்ஆன் 52:22

فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ

அவ்விரண்டிலும் கனியும், பேரீச்சையும், மாதுளையும் உள்ளன.
திருக்குர்ஆன் 55:68

No comments:

Post a Comment