அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 21 )
اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்.
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.
சட்டம்: மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும், மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் "அல்லாஹு அக்பர்" என்று கூற வேண்டும்.
ஆதாரம் : “என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மேல் ஆணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நாங்கள் “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று கூறினோம். உடனே அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்கள். நாங்கள், “அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அவர்கள், “சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள், “அல்லாஹு அக்பர்” என்று கூறினோம்.
அப்போது அவர்கள், “நீங்கள் மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு நிற முடியைப் போலத் தான் இருப்பீர்கள் அல்லது கருப்பு நிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை நிற முடியைப் போலத் தான் (குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி).
ஸஹீஹ் புகாரி 3348.
No comments:
Post a Comment