Thursday, March 23, 2023

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 27 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 27 )

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ الْحَمْدُ للهِ وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ اَللّهُمَّ اغْفِرْ لِيْ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி வஸுப்(B]ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்ப(B]ர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(B]ல்லாஹி, அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ.

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.

சிறப்பு : ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து இந்த துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால், அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

'யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும். என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1154.

No comments:

Post a Comment