وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ
وَبَرَكَاتُهُவ அலைக்கும் ஸலாம்
வ ரஹ்மத்துல்லாஹி
வ பரக்காத்துஹூ
"""""""""""""""""""""""""""""""""""""
இறைவனின் சாந்தியும்
சமாதானமும் உங்கள் மீதும்
உங்கள் குடும்பத்தார் மீதும்
என்றென்றும் நிலவட்டுமாக
ஆமீன்
➖➖➖➖🍃🌸
ஜும்ஆ நினைவூட்டல்..
உலக வாழ்க்கை
எண்ணற்ற
தொடர்புகளுடன்
பின்னிப்
பினைந்திருக்கிறது.
எல்லாவற்றிக்கும்
முந்தியது உங்களுக்கும்
உங்கள் உடலுக்கும்
இருக்கிற தொடர்பு,
கை, கால், கண்கள்.
காது, நா, இதயம்,
மூளை, ஆகிய
அனைத்தையும்
இறைவன்
கொடுத்திருக்கிறான்
அவற்றிடம் எந்த
வகையில் வேலை
வாங்குவது என்பதை
நீங்களே
தீர்மானித்துக் கொள்ள
வேண்டியிருக்கிறது.
வயிற்றுக்கு எதைக்
கொடுக்கலாம்,
எதைக் கொடுக்கக் கூடாது
கண் காது, நாவு,
கை கால். இதயம்
ஆகியப் பணியாளர்களுக்கு
இம்மை வாழ்வில்
நீங்களே!
பொறுப்பாளராக இருந்து
கொண்டிருக்கிறீர்கள்!
உங்களுடைய
இந்த பணியாளர்களை
வைத்து நல்ல முறையில்
வேலை வாங்கி
உயர்ந்த மனிதனாக
விளங்க முடியும்,
மிருங்களை விட
மட்டமான நிலைக்குக்
கொண்டு போகவும்
முடியும்!
எப்படி?
இந்த உலக
வாழ்க்கையை மட்டுமே
நேசிப்பவர்கள் பூமி
இவர்களை ஏமாற்றிக்
கொண்டிருக்கிறது
உதாரணமாக!
நாம் ஆட்டை
வளா்க்கிறோம் என்று
வைத்துக்கொள்வோம்!
நம்முடைய
நோக்கம் என்ன.?
ஆட்டுக்கு நன்றாக தீனி
கொடுத்து கொழுக்க
வைத்து ஒரு நாளைக்கு
அறுத்து சாப்பிடுவோம். அப்படித்தானே!
ஆனால்,
ஐந்தறிவு படைத்த
ஆட்டுக்குத் தெரியாது
ஏன்? மனிதன்
விழுந்து விழுந்து
உபசரிக்கிறான் என்று!
ஒருவேளை
தெரிந்தால் ஆடு
சாப்பிடுமா?
இது பெரிய
விஷயமே அல்ல !
ஐந்தறிவு உள்ள
மிருகம் ஆறறிவு
படைத்த மனிதனிடம்
ஏமாறுவது!
ஆனால்,
ஆறறிவு படைத்த
மனிதன் ஐந்தறிவு
படைத்த மிருகத்தைப்
போலவே பூமியிடம்
ஏமாறுகிறானே!
பூமி
தன்னுள் உள்ளவற்றை
அனைத்தையும்
மனிதனுக்குக்
கொடுத்து (உணவு.பொன்
பொருள்) கொழுக்க
வைக்கிறான்!
எதற்குத் தெரியுமா?
என்றாவது ஒருநாள்
என்னிடம் வருவாய்.!
நான் உன்னை ருசித்து
சாப்பிடுவேன்!
இம்மையை
நேசிப்பவர்களுடைய
நிலைமை இதுதான்,
ஆனால் மறுமையில்?
மிருகங்களுக்காவது சொர்க்கமுமில்லை,
நரகமும், இல்லை
நீங்கள்! மண்ணோடு
மண்ணாகி விடுங்கள்
என்று உத்தரவிடப்படும்!
அப்போதுதான்
மனிதன் கைசேதப்படுவான்!மிருகங்களாக
படைத்திருக்கக் கூடாதா!
மண்ணோடு மண்ணாகப் போயிருப்பேனே! என்று!!
No comments:
Post a Comment