Thursday, March 16, 2023

பல் வகைத் தண்டனைகள். ( 6 )

 பல் வகைத் தண்டனைகள். ( 6 )

வேதனை இலேசாக்கப்படாது.

وَقَالَ الَّذِينَ فِي النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ

"உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்'' என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 40:49

لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيهِ مُبْلِسُونَ

அவர்களுக்கு (தண்டனை) குறைக்கப்படாது. அதில் அவர்கள் நம்பிக்கையிழந்திருப்பார்கள்.
திருக்குர்ஆன் 43:75

நரகம் கடுமையான வெப்பமுடையது.

فَرِحَ الْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللَّهِ وَكَرِهُوا أَن يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنفِرُوا فِي الْحَرِّ ۗ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا ۚ لَّوْ كَانُوا يَفْقَهُونَ

அல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். "கோடையில் புறப்படாதீர்கள்!'' எனவும் அவர்கள் கூறுகின்றனர். "நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது'' என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
திருக்குர்ஆன் 9:81

மாளிகை போல் பிரம்மாண்டமான தீப்பந்தங்களை வீசி எறியும்.

إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ

அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.
திருக்குர்ஆன் 77:32

كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ

அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.
திருக்குர்ஆன் 77:33

No comments:

Post a Comment