Thursday, March 23, 2023

மீண்டும் உயிர் கொடுத்து அதிகாலை தொழுகையைத் தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

 மீண்டும் உயிர் கொடுத்து அதிகாலை தொழுகையைத் தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் உன் அருளைப் பொழிவாயாக.

اللهُم يا مُقلب القلوب ثبت قلبي علي الايمان و نجني مما أرغب و أرغمني علي ما ترغب

اللهم ان ضاقت علي الارض بما رحبت .. فأغثني برحمتك التي أغثت بها صاحب الحوت اللهم ان رفعت لك يديي أدعوك بحاجة ... فلا ترد يدي بلا حاجتي

யாஅல்லாஹ்! உள்ளங்களை மாற்றுபவனே! எங்கள் உள்ளத்தை
உன்னுடைய ஈமானின் பால் உறுதியாக்கி வைப்பாயாக!

நாங்கள் எதன் பால் ஆர்வமாக இருக்கிறேமோ அதிலிருந்து எங்களை மீட்டெடுப்பாயாக!

நீ எதனை செய்வதின் பால் ஆர்வப்படுவாயோ அதன் பால் எங்களை ஆர்வமடையச் செய்வாயாக!

யா அல்லாஹ்! இப்பூமி விசாலமாக இருந்தாலும் எனக்கு நெருக்கடி யாக மாறினால் மீன் வயிற்றில் இருந்த யூனுஸ் நபிக்கு உதவியது போல் எனக்கு உதவுவாயாக!

எங்களுடைய தேவைகளுக்காக உன்னிடம் துஆ செய்யும் பொழுது
தேவையை நிறை வேற்றாமல் வெறுங்கையாக திருப்பிவிட்டுவிடாதே!


رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை அதிலிருந்து தவறுமாறு செய்து விடாதே!

நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு ரஹ்மத் என்னும் நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!”
(அல்குர்ஆன் : 3:8)

பித்னாவும், பஸாதும் நிறைந்த இந்த காலகட்டத்தில் எங்களுக்கு சத்தியத்தை சத்தியம் எனவும் அசத்தியத்தை அசாத்தியம் எனவும் தெளிவுறக் காட்டுவாயாக!

அதில் குழப்பமடையச் செய்துவிடாதே நாங்கள் வழி தவறிவிடுவோம்.
நேர்வழியிலேயே எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக!


இம்மையிலும், எங்களுக்கு அழகானவற்றையே அளிப்பாயாக
மறுமையிலும் அழகானவற்றையே வழங்குவாயாக.

உன்னையே வணங்குகிறோம்
உன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம்

ஆமீன்.

No comments:

Post a Comment