பல் வகைத் தண்டனைகள். ( 5 )
நரகவாசிகளின் கூச்சலும், அலறலும்.فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ
கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.
திருக்குர்ஆன் 11:106
لَهُمْ فِيهَا زَفِيرٌ وَهُمْ فِيهَا لَا يَسْمَعُونَ
அங்கே அவர்களுக்கு விம்மியழுதலே உண்டு. அவர்கள் அங்கே எதையும் செவியுற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 21:100
இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவார்கள்.
وَلَهُم مَّقَامِعُ مِنْ حَدِيدٍ
அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.
திருக்குர்ஆன் 22:21
கீழ்ப்புறத்திலிந்தும், மேற்புறத்திலிருந்தும் வேதனை செய்யப்படும்.
يَوْمَ يَغْشَاهُمُ الْعَذَابُ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِمْ وَيَقُولُ ذُوقُوا مَا كُنتُمْ تَعْمَلُونَ
அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் "நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!'' என்று (இறைவன்) கூறுவான்.
திருக்குர்ஆன் 29:55
மண்டை ஓட்டைக் கழற்றும் வெப்பம்.
نَزَّاعَةً لِّلشَّوَىٰ
அது தோலை உரிக்கும்.
திருக்குர்ஆன் 70:16
No comments:
Post a Comment