நரகம். ( 2 )
என்றும் வெளியேற முடியாது.يُرِيدُونَ أَن يَخْرُجُوا مِنَ النَّارِ وَمَا هُم بِخَارِجِينَ مِنْهَا ۖ وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ
அவர்கள் நரகிலிருந்து வெளியேற விரும்புவார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்கள் வெளியேற முடியாது. அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 5:37
وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ ۖ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.
திருக்குர்ஆன் 32:20
நரகத்திற்கு ஏழு வாசல்கள் உள்ளன.
لَهَا سَبْعَةُ أَبْوَابٍ لِّكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُومٌ
அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும் உள்ளனர்.
திருக்குர்ஆன் 15:44
அனைவரும் நரகைக் கடக்க வேண்டும்.
وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا
உங்களில் எவரும் அதைக் கடக்காமல் இருக்க முடியாது. இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் கடமை.
திருக்குர்ஆன் 19:71
நரகில் பல படித்தரங்கள்.
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًا
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்.
திருக்குர்ஆன் 4:145
No comments:
Post a Comment