அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 26 )
اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர்.
என்று கூறுவார்கள். பின்னர்,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ كَيْدَهُ إِلَى الْوَسْوَسَةِ
அல்ஹம்துலில்லாஹில்லதி ரத்த கைய்தகு இலல் வஸ்வஸதி.
பொருள் : (ஷைத்தானாகிய) அவனுடைய சூழ்ச்சியை தீய எண்ணங்களைப் போடுவதன் பக்கம் திருப்பிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.
சட்டம் : மனிதர்களின் உள்ளங்களில் "தீய எண்ணங்களைப் போடுவது மட்டும் தான்" ஷைத்தானுக்கு அதிகாரம் உள்ளது.
ஆதாரம் : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உங்களில் சில (தீய) எண்ணங்கள் ஏற்படுகிறது. அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹு அக்பர் (அல்லாஹ்வே மிகப் பெரியவன்), அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (என்று கூறிவிட்டு ஷைத்தானாகிய) அவனுடைய சூழ்ச்சியை தீய எண்ணங்களைப் போடுவதன் பக்கம் திருப்பிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத்-5112 (4448)
No comments:
Post a Comment