பிஸ்மில்லாஹ் என்பதன்
சிறப்பு. ( 3 )بِسْمِ اللهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி.
பொருள் : ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்.
சட்டம் : சாப்பிடும் போதும், பருகும் போதும் பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால், இந்த துஆவை ஓத வேண்டும்.
ஆதாரம் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் “பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி” (பொருள்: ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்) என்று கூறட்டும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: திர்மிதி 1781
No comments:
Post a Comment