Monday, March 20, 2023

பல் வகைத் தண்டனைகள். ( 8 )

 பல் வகைத் தண்டனைகள். ( 8 )

நெருப்பின் வேகம் தணியும்போது உடனே அதிகரிக்கப்படும்.

مَّأْوَاهُمْ جَهَنَّمُ ۖ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا

அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம்.
திருக்குர்ஆன் 17:97

முகத்தை எரிக்கும் நெருப்பு.

سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ النَّارُ

அவர்களின் சட்டைகள் தாரினால் தயாரிக்கப்பட்டவை. அவர்களின் முகங்களை நெருப்பு மூடிக் கொள்ளும்.
திருக்குர்ஆன் 14:50

تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ

அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமான தோற்றத்துடன் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 23:104

குளிர்ச்சியை அனுபவிக்க மாட்டார்கள்.

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 78:24

இதயங்களைத் தாக்கும் கடும் நெருப்பு.

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ


மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும்.
திருக்குர்ஆன் 104:6,7

No comments:

Post a Comment