Saturday, March 25, 2023

என்றென்றும் நரகில் கிடப்போர்கள். ( 2 )

 என்றென்றும் நரகில் கிடப்போர்கள். ( 2 )

மறுமையை நம்பாதவர்கள்.

وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ ۗ أُولَٰئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ ۖ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

நீர் ஆச்சரியப்பட்டால் "நாங்கள் மண்ணாக ஆன பின்பும் புதுப் படைப்பாக ஆவோமா?' என்று அவர்கள் கூறுவது (iஇதைவிட) ஆச்சரியமாகவுள்ளது. அவர்கள் தான் தமது இறைவனை ஏற்க மறுத்தவர்கள். அவர்களின் கழுத்துக்களில் தான் விலங்குகள் உள்ளன. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 13:5

وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا

மறுமையை நம்பாமல் இருப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
திருக்குர்ஆன் 17:10

أَفْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَم بِهِ جِنَّةٌ ۗ بَلِ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ فِي الْعَذَابِ وَالضَّلَالِ الْبَعِيدِ

இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டினாரா? அல்லது இவருக்குப் பைத்தியமா? அவ்வாறில்லை! மறுமையை நம்பாதோர் வேதனையிலும், தூரமான வழிகேட்டிலும் உள்ளனர்.
திருக்குர்ஆன் 34:8

சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர்.

اتَّخَذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ

அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தார்கள். இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு.
திருக்குர்ஆன் 58:16

اتَّخَذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ ۚ إِنَّهُمْ سَاءَ مَا كَانُوا يَعْمَلُونَ

அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது.
திருக்குர்ஆன் 63:2

No comments:

Post a Comment