Sunday, March 26, 2023

லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 1 )

லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 1 )


لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ

லாயிலாஹ இல்லல்லாஹ்.

பொருள் : வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

சிறப்பு : அல்லாஹ்வின் பொருத்தம் நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகிறவரின் மீது நரகத்தை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான்.

ஆதாரம் : தம் உள்ளத்தில் ஒரு வால் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியவர் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் இதயத்தில் ஒரு கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' சொன்னவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் உள்ளத்தில் ஓர் அணு அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' கூறியவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 44

No comments:

Post a Comment