Sunday, March 19, 2023

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 23 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 23 )


الله أكبر لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ

அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன்.

சட்டம் : மஷ்அருல் ஹராமில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியது.

ஆதாரம் : (பஜ்ரு தொழுததும்) கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏறி மஷ்அருல் ஹராம் என்ற இடத்துக்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். (அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹு கூறி அவனது ஏகத்துவத்தை நிலை நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும் வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன் உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப்) புறப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2334

No comments:

Post a Comment