அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 24 )
اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர்
எனக் கூறுவார்கள். பின்னர்,
إِنْ شَاءَ اللَّهُ آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ حَامِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ
இன்ஷா அல்லாஹ், ஆயிபூன,தாயிபூன, ஆபிதூன, ஹாமிதூன. சாஜிதூன, லி ரப்பினா ஸதகல்லாஹு வஅதஹு; வ நஸர அப்தஹு; வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு.
பொருள் : இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும் வணக்கம் புரிபவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே (நெற்றியை நிலத்தில் வைத்துச்) சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டிவிட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்துவிட்டான்; தன்னந் தனியாக (அனைத்துக்) குலங்களையும் தோற்கடித்துவிட்டான்.
சட்டம் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பும் போது, தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும், மூன்று தடவை அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்.
ஆதாரம் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (புனிதப் போரிலிருந்து) திரும்பிச் செல்லும்போது மூன்று முறை 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று கூறிவிட்டு, 'இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும் வணக்கம் புரிபவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே (நெற்றியை நிலத்தில் வைத்துச்) சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டிவிட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்துவிட்டான்; தன்னந் தனியாக (அனைத்துக்) குலங்களையும் தோற்கடித்துவிட்டான்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3084.
No comments:
Post a Comment