அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 15 )
اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்.
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.
சட்டம் : தவாஃப் செய்யும் போது ஒவ்வொரு தடவையும், ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்" என்று கூற வேண்டும்.
ஆதாரம் : இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு 'அல்லாஹு அக்பர்' 'அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று கூறினார்கள்.'
ஸஹீஹ் புகாரி : 1613.
No comments:
Post a Comment