Monday, March 13, 2023

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 20 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 20 )


سبحان الله. الحمد لله. لا إله إلا الله.
الله اكبر.

சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்.

பொருள் : அல்லாஹ் தூயவன், அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை,
அல்லாஹ் மிகப்பெரியவன்.

சிறப்பு : அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள்.

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).
இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி),
ஸஹீஹ் முஸ்லிம் : 4330.

No comments:

Post a Comment