அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 13 )
اَللهُ أَكْبَرُஅல்லாஹு அக்பர்.
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.
சட்டம் : ஜனாஸாத் தொழுகையில் "அல்லாஹு அக்பர்" என்று நான்கு "தக்பீர்"கள் கூறி தொழ வேண்டும்.
ஆதாரம் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (நீகஸ்) இறந்த அன்றே அவரது மரணச்செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு மக்களுடன் "முஸல்லா" எனும் தொழும்திடலுக்குப் புறப்பட்டுச் சென்று ("அல்லாஹு அக்பர்" என்று) நான்கு "தக்பீர்"கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1733.
No comments:
Post a Comment