. 🌻🌻🌻🌻🌻🌻🌻
நபிமொழிநபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்
“உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன்.
ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டதைப் போன்று என்னையும் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்.
நான் என் சமுதாயத்தாருள் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே என் உற்ற தோழராக ஆக்கிக் கொண்டிருப்பேன்.
அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்.
எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள்.
அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்” என்று கூறுவதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)
நூல்: முஸ்லிம் 5030
No comments:
Post a Comment