Wednesday, March 1, 2023

சொர்க்கத்தில் உணவு. ( 5 )

 சொர்க்கத்தில் உணவு. ( 5 )

வெண்மையான, சுவையான மது பரிமாறப்படும். அதில் போதை இருக்காது.

يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍ

மது ஊற்றிலிருந்து (நிரப்பப்பட்ட) குவளைகள் அவர்களைச் சுற்றி வரும்.
திருக்குர்ஆன் 37:45

بَيْضَاءَ لَذَّةٍ لِّلشَّارِبِينَ

அது வெண்மையானதும், அருந்துவோருக்கு இன்பம் அளிப்பதுமாகும்.
திருக்குர்ஆன் 37:46

لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ

அதில் எந்தக் கேடும் இல்லை. அவர்கள் மதி மயக்கப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 37:47

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ

இளமை மாறாத சிறுவர்கள் மது ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட குவளையுடனும், கிண்ணங்களுடனும், கெண்டிகளுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்.
திருக்குர்ஆன் 56:18

لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

அதனால் அவர்களுக்குத் தலைவலி வராது. போதை மயக்கத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 56:19

يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ

முத்திரையிடப்பட்ட மது புகட்டப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 83:25

خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ

அதன் முத்திரை கஸ்தூரியாகும். போட்டியிடுவோர் இதில் தான் போட்டியிட வேண்டும்.
திருக்குர்ஆன் 83:26

No comments:

Post a Comment