சொர்க்கச் சோலைகள். ( 8 )
உயர்தரமான விரிப்புகள் உள்ளன.مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ
அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும்.
திருக்குர்ஆன் 55:54
مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ
பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 55:76
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 56:34
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ
விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு.
திருக்குர்ஆன் 88:16
அங்கிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள்.
خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا
அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 18:108
No comments:
Post a Comment